பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமந்தா!

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டுப் பண்டிகைகளும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்டிகைகள் என்பதால் நடிகை சமந்தா நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண் நடிகர்களால்தான் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜுனாவுக்குப் பதில் சமந்தா தொகுத்து வழங்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிக்பாஸ் என்பவர் ஒரு ஆணாகத்தான் இருக்கவேண்டுமா? பெண்களுக்கு அந்தத் திறமை இல்லையா? போன்ற கேள்விகள் எழுந்துவந்த நிலையில் சமாந்தா தொகுத்து வழங்குவது பாராட்டுக்களைக் பெற்றுள்ளது.
newstm.in