1. Home
  2. தமிழ்நாடு

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் - நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு..!

1

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதற்கிடையே இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் உத்தரபிரதேச துணை முதல்வருடன் ரஜினி ஜெயிலர் திரைப்படம் பார்த்தார். பின்னர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ரஜினி சந்தித்தார். 

இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும்,  சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம். அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like