பிரபல நடிகர் சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகையுடன் திருமணமா ?

50 வயசுக்கு மேல ஆனாக்கூட சல்மான் கான கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க கியூல நின்னுகிட்டு இருந்தாங்க. இப்போ சல்மான் கானுக்கு 59 வயசாகுது. இன்னும் இந்தியால ஆயிரக்கணக்கான பொண்ணுங்க சல்மான் கானை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்காங்க. ஆனா, இப்போ இந்தியால இருக்க எல்லா பொண்ணுங்களையும் விட்டுட்டு சல்மான் கான் அவரவிட 31 வயசு சின்ன பெண்ணான பாகிஸ்தான் நடிகையை கல்யாணம் பண்ணிக்கப் போறாராம்.
இதைப்பற்றி பேசிய பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், பாகிஸ்தான சேர்ந்த அந்த 28 வயசு நடிகை யாருன்னு போட்டோவோட அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. சல்மான் கான் கல்யாணம் பண்ணிக்கப் போற பாகிஸ்தான் நடிகையோட பேரு ஹானியா அமீர் என ராக்கி சாவந்த் கூறி உள்ளார். இவர் சல்மான் கான விட 31 வயசு சின்னவங்க. ஆனாலும் ராக்கி வைரல் வீடியோல 28 வயசான இந்த நடிகையை தன்னோட பாபி (அத்தை)ன்னு சொல்றாங்க.
ராக்கி சாவந்த்தின் இந்த வைரல் வீடியோவுக்கு நிறைய கமெண்ட்ஸ் வந்துருக்கு. 'ராக்கியோட வைரல் வீடியோவ பாத்துட்டு ஒரு நெட்டிசன் 'இவ மெண்டல்'னு எழுதி இருக்காரு.
யார் இந்த ஹானியா அமீர்?
ஹானியா அமீர் பாகிஸ்தான்ல சின்னத்திரை மற்றும் சினிமா நடிகை. அவங்க 2017ல 'தித்லி' நிகழ்ச்சியோட டிவிக்கு வந்தாங்க. அதுக்கப்புறம் அவங்க பாகிஸ்தான்ல 'அனா', 'நா மாலூம் அஃப்ராட் 2', 'பர்வேஸ் ஹே ஜுனூன்', 'மேரே ஹம்சஃபர்' மற்றும் 'கபி மை கபி தும்' மாதிரியான நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாவுல நடிச்சிருக்காங்க. இவர் சல்மான் கானின் காதலி என நடிகை ராக்கி சாவந்த் புது குண்டை தூக்கி போட்டுள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.