மாதம் ரூ.26,660 சம்பளம்..! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!
CMRL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், ஜூலை 2 முதல் ஜூலை 9, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் நேரடியாகக் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
| விண்ணப்பிக்கும் முறை | நேரடி நேர்காணல் |
| நேர்காணல் தேதி | ஜூலை 02, 2025, ஜூலை 03, 2025, ஜூலை 04, ஜூலை 07, 2025, ஜூலை 08, 2025 & ஜூலை 09, 2025 |
| பணியிடம் | சென்னை |
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| பணியின் பெயர் | கல்வி தகுதி |
| Supervisor (Operations) | Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
| Supervisor (Maintenance) | Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
CMRL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பணியின் பெயர் | கல்வி தகுதி |
| Supervisor (Operations) | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
| Supervisor (Maintenance) | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கான சம்பள விவரங்கள் பதவி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| பணியின் பெயர் | சம்பளம் |
| Supervisor (Operations) | ரூ.26,660/- |
| Supervisor (Maintenance) | ரூ.26,660/- |
சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.
- ஆவண சரிபார்ப்பு மற்றும் பரிசீலனை (Document Verification, Screening): விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான தகுதிகள் உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
- தமிழ் மொழித் திறன் தேர்வு (Tamil Language Reading, Writing and Speaking Proficiency Test): விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் உள்ள திறனைச் சோதிக்கும் வகையில் ஒரு தேர்வு நடத்தப்படும்.
- மனோவியல் தேர்வு (Psycho. Test): மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் செயல்பாடுகள் (Operations) போன்ற சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களின் மனோவியல் திறனை மதிப்பிடும் வகையில் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது
எப்படி விண்ணப்பிப்பது: சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 2 முதல் ஜூலை 9, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் உடன் எடுத்து வரவும்.
நேர்காணல் நடைபெறும் தேதிகள்:
- ஜூலை 02, 2025
- ஜூலை 03, 2025
- ஜூலை 04, 2025
- ஜூலை 07, 2025
- ஜூலை 08, 2025
- ஜூலை 09, 2025
நேர்காணல் நடைபெறும் இடம்:
Institute of Chemical Technology, C I T Campus, Tharamani, Chennai- 600 113
தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.