1. Home
  2. தமிழ்நாடு

சலார் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்… முன்பதிவு தொடக்கம்…!

1

கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கி வரும் அடுத்த பிரம்மாண்ட படைப்பு சலார். இப்படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கிறார். பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சலார் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி படத்திற்கு முன்பதிவும் தொடங்கி உள்ளது.

Trending News

Latest News

You May Like