1. Home
  2. தமிழ்நாடு

நமது இதயத்தில் சிஎஸ்கே வீரர்கள் தான்! உணர்ச்சிவசப்பட்ட சாக்‌ஷி தோனி !

நமது இதயத்தில் சிஎஸ்கே வீரர்கள் தான்! உணர்ச்சிவசப்பட்ட சாக்‌ஷி தோனி !


"நிஜமான வீரர்கள் நமது மனதிலும், இதயத்திலும் சூப்பர் கிங்ஸ் தான் எப்போதும் உள்ளனர்" என சாக்‌ஷி தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போடியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராமில் சாக்‌ஷி தோனி உணர்ச்சி பொங்க ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், "இது வெறும் விளையாட்டு தான். சிலவற்றை இழக்கிறார்கள். சிலவற்றை பெறுகிறார்கள். இதற்கு முன்பு வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளனர். யாரும் தோற்க விரும்பவில்லை. ஆனால் அனைவராலும் எப்போதும் வென்றுவிட முடியாது” என்று தனது கருத்தை மிக ஆழமாக பதவிட்டுள்ளார்.

மேலும், நிஜமான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அதனால், அவர்கள் நமது மனதிலும், இதயத்திலும் எப்போதும் சூப்பர் கிங்ஸ்தான் ” என அதில் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like