கபாலி படத்திலும் நடித்திருந்தாலும் நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் மூலம் தான் பிரபலம். அண்மையில் இவர் டிக் டாக் செயலியை தடைசெய்ய வலியுறுத்தியும் தடை செய்த பின் அதற்கு நன்றி தெரிவித்தும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தன்னம்பிக்கை அளிக்கும் வரிகளை எழுதியுள்ளார்.
அதில், “நான் ஸ்கூல் படிக்கும்போது கொஞ்சம் குண்டா இருப்பேன். அப்போ என்ன எல்லாரும் பிந்துகோஸ், குண்டு பூசணிக்கா, குண்டாத்தி என கேலி செய்வார்கள். நான் அப்போலாம் என்னோட படிப்பில் தான் கவனம் செலுத்தினேன், இப்பதான் மாடலா மாறி இருக்கிறேன் என கூறியுள்ளார். நாம மத்தவங்க சொல்றத எப்போதுமே கேட்கக்கூடாது நாம நாமளாதான் இருக்கணும், என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாவ்... என்ன ஒரு மாற்றம் என்று வாயை பிளக்கின்றனர்.