சாய்ரா பானு வெளியிட்ட பரபரப்பு ஆடியோ..! ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய என்ன காரணம்..?
ஏ.ஆர்.ரஹ்மானை, பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த செய்தி, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதற்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்த தெரியாமலே, பலர் ஏ.ஆர்.ரஹ்மானை குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், சாய்ரா பானு ஒரு தனியார் ஊடகத்திற்கு ஆடியோவை அனுப்பியிருக்கிறார்.
“சாய்ரா ரஹ்மான் பேசுகிறேன். நான் இப்போது பாம்பேயில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உடல் நிலையும் மனநிலையும் சரியாக இல்லை. இதன் காரணமாகத்தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனால், ஒட்டுமொத்த யூடியூபர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து அவரைப்பற்றி தவறாக சொல்லாதீர்கள். அவர் தங்கமானவர், இந்த உலகிலேயே சிறந்த மனிதர். எனது உடல் நிலை காரணமாக சென்னையில் இருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது பாம்பே வந்து ட்ரீட்மெண்டில் இருக்கிறேன்.
சென்னையில் இருக்கும் ரஹ்மானின் பிசியான வேலைக்கு நடுவே என்னால் ட்ரீட்மெண்ட் பார்க்க முடியாது. அவருக்கும் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுக்க கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன். அவர் ஒரு நல்ல மனிதர். அவரை அப்படியே விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையையே அவரை நம்பி கொடுத்திருக்கிறேன். அவரும் நானும் அந்த அளவிற்கு இருவரையும் நேசிக்கிறோம். இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் சென்னைக்கு வருவேன். அதுவரை, அவர் குறித்து அவதூறு பரப்பாமல் இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.