என்ன நடந்தது ..? விபத்தில் சிக்கிய சைதை துரைசாமி மகன்..! டிரைவர் உயிரிழப்பு..!
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்று இருந்த போது அவரது இன்னோவா கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அம்மாநிலத்தின் நாலா என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டிருந்தபோத அருகே இருந்தால் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஆற்று நீரில் மூழ்கிய காரில் இருந்து கார் ஒட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அத்துடன் அவர்களுடன் சென்ற திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
சட்லஜ் ஆற்றில் நடந்த இந்த விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மாயமாகியுள்ளார்.
அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக இமாச்சலப் பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநரின் பெயர் தன்சின் என்றும், இமாச்சலப் பிரதேச மாநில விபிஓ என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கார் விபத்துக்குள்ளையுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்