1. Home
  2. தமிழ்நாடு

மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமான பேச்சு!

1

வெற்றி துரைசாமி உடல் கண்ணம்மாபேட்டையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைதை துரைசாமி, எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் மனம் கலங்க மாட்டேன். சேவையை பிரதானப்படுத்தி வாழ்க்கையை அமை துக்கொள்வேன் என இந்த நாளில் சூளுரை கொள்கிறேன்.ஒரு மகன் போனாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளில் இருக்கும் மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். சக மனிதனுக்காக வாழ வேண்டும் என்றும் இங்குள்ள 259 சாதிகளில் 170 சாதியினர் அரசு பணியில் இருப்பதாகவும், மீதமுள்ள 89 பிரிவுகளில் உள்ளவர்களை அரசு பணியில் அமர வைப்பேன் என இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் என்றார். இங்குள்ள அனைத்து சமூகத்தினரை சார்ந்தவர்களையும் அரசுப் பணியில் சேர்க்க வைக்க முயற்சிப்பேன்.

இதனை இந்த நேரத்தில் உறுதியாக எடுத்துக்கொள்கிறேன்"என்றார்.


 

Trending News

Latest News

You May Like