1. Home
  2. தமிழ்நாடு

2023- ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

1

தமிழில் எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நிழலின் தனிமை, நொய்யல், அற்ற குளத்து அற்புத மீன்கள் உள்ளிட்ட நாவல்களை தேவி பாரதி எழுதியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கஸ்பாபேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன்.ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் முழு நேர எழுத்தாளராக மாறி கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.இவருடைய மூன்றாம் நாவல்தான் 'நீர்வழிப் படூஉம்'. இந்நாவல், ஏழை மக்களின் வாழ்வியலையும் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உறவையும் பற்றி பேசும் நாவலாகும்.

2024- ஆம் ஆண்டு மார்ச் 12- ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது, பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள எழுத்தாளர் தேவி பாரதி, சாகித்ய அகாடமி விருது பெறுவது உத்வேகம் தரும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like