திண்டுக்கல் அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் காவி சாயம் !

திண்டுக்கல் அருகே பெரியார் சிலைக்கு மீண்டும் காவி சாயம் பூசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே ரெட்டியார் சத்திரம் சமத்துவபுரம் உள்ளது. இங்கு பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயத்தை பூசி வீட்டு தப்பியோடிவிட்டனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒட்டன்சத்திரம் போலீசார், இரவில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு பெரியார் சிலைக்கு புதிய வர்ணம் பூசினர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துவிடுவோம் என போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
காவி சாயம் பூசப்பட்ட பெரியார் சிலையை பார்வையிட்ட பழனி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.