1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் காவி உடை: ஆளுநர் கிளப்பிய சர்ச்சை..!

Q

1969-ல் முதல்வராக முதன்முறையாக பதவியேற்ற கருணாநிதி தைப்பொங்கலுக்கு மறுநாளைத் ’திருவள்ளுவர் நாள்’ என பிரகடனம் செய்து, அரசு விடுமுறை அறிவித்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நாளை திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் எனக் கூறி, ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ளது. இது மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னரும் கடந்த ஜனவரி மாதமும் ஆளுநர் ரவியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுவர் திருநாள் விழா' நாளை(மே 24) மாலை 5 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இதற்காக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவரின் புகைப்படம் காவி உடையுடன் காணப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

Trending News

Latest News

You May Like