சத்குரு பரிந்துரைக்கும் 30% பழங்கள் டயட்..! தினமும் 30 சதவீதம் பழங்களை சேர்த்துக் கொள்வதால்...

ஆன்மீக தலைவர் சத்குரு பரிந்துரைக்கும் 30% உணவு முறை சவால் (30% diet challenge) குறித்து காணலாம்.
இந்த சவாலில் நாள்தோறும் உணவில் குறைந்தபட்சம் 30 சதவீதம் புதிய பழங்களை சாப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறார். பொதுவாக பழங்களை சாப்பிடும் போது உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. அதனுடன் செரிமான மண்டலமும் சிறப்பாக செயல்பட உதவுகிறது. முழுவதும் உணவுகளாக எடுத்துக் கொள்ளாமல் 30 சதவீதம் பழங்களை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
முழுமையாக கார்பிஹைட்ரேட் உணவுகளை எடுத்து கொண்டால் மந்தமாக உணர்வோம். எடை அதிகரிக்கும். 30% பழங்கள் உண்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இவை ரத்தத்தில் உடனடியாக சர்க்கரை அளவை அதிகரிக்காது. அதிக ஆற்றலை தரும். செயற்கை சர்க்கரை நம்முடைய உடல் எடையை அதிகரிப்பதுடன் பல்வேறு நோய்களுடன் தொடர்புடையது. நீங்கள் சாக்லேட் சாப்பிட அதிகமாக தூண்டப்பட்டால், அதை சாப்பிட்ட பின்பு மேலும் உண்ணத் தூண்டப்படுவீர்கள். ஆனால் அதே நேரத்தில் சாக்லேட்டிற்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். பசிக்காது. இது உங்களுடைய இனிப்பு தேவையை பூர்த்தி செய்வதோடு பக்க விளைவுகளையும் குறைக்கிறது.
பழங்களின் சத்துக்கள்;
- பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவது எளிது. உடலுக்கு போதுமான ஆற்றலையும் வழங்குகின்றன.
- " சுத்தமான உணவு வகைகளில் பழங்களும் குறிப்பிடத் தகுந்தது. இது செரிமான அமைப்பில் குறைந்த கழிவுகளையே விடுகின்றன. எளிதில் ஜீரணமாகும் உணவில் பழங்களும் உண்டு. நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதை விட அதிக பழங்களை உண்ணலாம்"என்கிறார் சத்குரு.
- செரிப்பதற்கு கடினமான உணவுகளை உண்பதற்கு பதிலாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். அதாவது துரித உணவுகள், ஜங்க் புட்ஸ் விட பழங்கள் எளிதில் - செரிக்கக் கூடியவை. இவை இலகுவாகவும், அதிக ஆற்றலை தரும் உணவாகவும் இருக்கும். பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு பல நன்மைகள் செய்கின்றன. தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க பழங்கள் உண்பது நல்லது.
30% டயட் சேலஞ்ச்!
தினமும் 30 சதவீதம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நச்சுக்கள் எளிதில் நீக்கப்படுகின்றன. இதனால் உடலின் தேவையில்லாத கழிவுகள் நீக்கப்பட்டு ஆரோக்கியமாக இருக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பழங்களை உணவில் சேர்க்கலாம். இவை உடலில் இயற்கையான நச்சுநீக்கியாக செயல்படுகிறது.
நமது உடலில் கழிவுநீக்க உறுப்பாக செயல்படுவது கல்லீரலும் சிறுநீரகங்களும் தான். இவற்றின் அழுத்தத்தை குறைக்க பழங்கள் உதவுகின்றன. உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளை சரி செய்ய ,எடை குறைக்க பல்வேறு பிரச்சனைகளுக்கு பழங்கள் உண்பது உதவியாக இருக்கும்.
பழங்களால் ஏற்படும் பலன்கள்;
- தினமும் உணவில் 30% பழங்களை எடுத்துக் கொள்வதால் மனத்தெளிவு ஏற்படுகிறது. படைப்பாற்றல் மேம்பட்டு வேலையில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். உடலில் ஆற்றல் அதிகமாகும். பழங்களை உண்ணும் போது அவை விரைவாக செரிக்கப்படும். இதனால் அதிக ஆற்றல் விரைவாக கிடைக்கும். உடலும் சுறுசுறுப்பாக இயங்கும்.
- மனத்தெளியுடன் தெளிவாக இருக்க விரும்புவோர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய சோம்பலை நீக்கி நீடித்த ஆற்றலை வழங்கும். நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரைகள் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. பழங்களில் உள்ள சர்க்கரை, வெள்ளை சர்க்கரையைப் போல உடனடியாக சர்க்கரை அளவு அதிகரித்து பசியை தூண்டாது. பழங்கள் நிலையான ஆற்றலை வழங்குகின்றன. பழங்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையைப் போல இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தாது. இது செயலிழப்புகள் இல்லாமல் நிலையான ஆற்றலை உறுதி செய்கிறது.
பழங்களை எவ்வாறு உண்ணலாம்?
காலை உணவாக ஒரு கிண்ணம் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்களை கலவையாக உண்ணலாம். பப்பாளி, மாதுளை, செர்ரி பழங்களை ஒருநாள் எடுத்து கொள்ளலாம். இப்படி காலை உணவாக பழங்களை உண்ணலாம். ஊட்டச்சத்துகளை அதிகமாக உறிஞ்ச உதவும் பழங்களை உண்ணலாம்.