1. Home
  2. தமிழ்நாடு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவம் குறித்து சத்குரு...

Q

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண மாநில அமைப்புகளைத் தாண்டி தேசிய அளவிலான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கொல்கத்தா பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சத்குரு அவர்கள் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சத்குரு அவர்களின் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, "இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் மிகக் கொடூரமான குற்றங்களுக்குத் தீர்வு காண, மாநில அமைப்புகளைத் தாண்டி ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் இப்போது நடந்து கொண்டிருப்பது நம் நாட்டையே கேலிக்கு உள்ளாக்கும் இரக்கமற்ற செயலாகும். பாரதத்தில் துடிக்கும் இதயத்துடன் இருக்கும் குடிமக்கள் எவரும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உடனடி நடவடிக்கை தேவை!" எனக் கூறி இருக்கிறார்.


 


 

இது போன்ற கொடூர குற்றங்களால் ஏற்படும் பின்விளைவுகளை நாடு சந்தித்து வரும் வேளையில், இதனைக் கையாள அமைப்பு ரீதியிலான மாற்றம் வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி உள்ளது. பெண்களுக்கு எதிரான இது போன்ற கொடூர குற்ற வழக்குகளில் தலையிடும் அதிகாரம் கொண்ட தேசிய அளவிலான அமைப்பு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு விரைவான நீதியையும் சிறந்த பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

Trending News

Latest News

You May Like