மீண்டும் சோகம்..! பட்டாசு கிடங்கில் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே குறிப்பன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டாசு வெடி விபத்தில் ஒருவரை காணவில்லை என்றும், அவரை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முத்துகண்ணன், விஜய் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.