சோகம்..! சிறப்பு ரயிலுக்கான கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி..!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் பிற மாநிலங்களுக்கு இயக்கப்பட்டது. இதில் பயணிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சூரத் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
இதன் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு ரயிலில் பயணிப்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததே, இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம்.
இதனிடையே சிறப்பு ரயில்கள் குறித்து போதிய தகவல்களை ரயில் நிலைய முகப்பில் வைக்க ரயில்வேத்துறை தவறியதால், ஏராளமானோர் ஒரே நடைமேடையில் குவிந்ததால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பயணிகளுக்கு தகவல் வழங்க போதுமான ரயில்வே பணியாளர்கள், ரயில் நிலையத்தில் இல்லை எனவும் பயணிகள் தெரிவித்தனர். இந்த தகவலை மறுத்துள்ள ரயில்வேத்துறை அதிகாரிகள், போதுமான ஊழியர்கள் இருந்ததாகவும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள், ரயில் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிந்ததே நெரிசலுக்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.