சோகம்..! ' இரும்பு நுரையீரல் மனிதன்' 70 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் இறந்தார்..!

யாரவது நம்மை ஒரு தனி அறையில் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்.? முதலில் கொஞ்ச நேரம் வருத்தமாக இருக்கும் பிறகு கோபம் வரும். கொஞ்ச நேரத்தில் சலிப்பு ஏற்பட்டு நம் கோபத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தத் தொடங்குவோம். ஆனால் இங்கு ஒருவர் 70 ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தில் சிக்கி இன்றும் அதே நிலையில் தான் அவர் இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?
இந்த மனிதனின் பெயர் பால் அலெக்சாண்டர். அவர் ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 70 ஆண்டுகளாக இயந்திரத்திற்குள் பூட்டப்பட்டுள்ளார். அந்த இயந்திரத்திற்குள் இருந்தபடியே உணவு மற்றும் பானங்கள் அனைத்தும் எடுத்துக்கொள்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் பால், 1952-ஆம் ஆண்டு அவருக்கு 6 வயதாக இருந்தபோது போலியோவால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் அவரது உடல் முழுவதும் செயலிழந்தது. கழுத்தில் உள்ள பகுதி மட்டும் வேலை செய்கிறது. ஏன்னென்றால், இவர் ஆறாவது வயதில் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஐந்து நாட்களில் அவரது உடல் முழுமையும் செயலிழந்து போனது.
இதனால் பால் அலெக்சாண்டரால் நகரவோ, சுவாசிக்கவோ முடியாமல் போனது. இதனையடுத்து, பால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் விரைவாகட்ரக்கியோஸ்டோமியை செய்வதற்கு முன்பு அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். ஆனால், அவர் இறக்கவில்லை. அவரது கழுத்திற்கு கீழ் உள்ள அனைத்து உறுப்புகளும் செயலிழந்து தான் போயிருந்தது.
பின்னர் அவருக்கு ‘Tracheostomy’ என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அப்போதுதான் பால் அலெக்சாண்டருக்கு சிலிண்டர் வடிவிலான ‘இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 18 மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் இந்த இரும்பு நுரையீரலோடு வெளியே செல்ல முடியாது என்பதால் ‘frog breathing’ என்ற முறையை அவர் கையாண்டார். அதுவே அவரது உயிரைக் காப்பாற்றியது. இந்த இயந்திரத்தின் பெயர் இரும்பு நுரையீரல்.கிட்டத்தட்ட சவப் பெட்டி போல வடிவமைக்கப்பட்ட அந்த இரும்பு நுரையரலுடன் வாழ்வது என்பது மிகவும் கொடுமையானது. அந்த வாழ்க்கையைத் தான் அலெக்சாண்டர் வாழ்ந்தார்
இந்த பரிதாப நிலை இருந்தும் பால் மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். பல ஆண்டுகளாக வழக்கறிஞர் பயிற்சி செய்தார். அதன் பிறகு அவர் தன்னைப் பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதினார். இவை அனைத்தும் அவரை இந்த இயந்திரத்திற்குள் இருந்தபடியே செய்துள்ளார்.
மேலும், வாயால் அற்புதமாக ஓவியம் வரையக் கூடியவர் என்பது இவரின் மிகப்பெரிய சிறப்பு.
இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இரும்பு நுரையீரலுடன் சுவாசித்து உயிர் வாழ்ந்து வந்த பால் அலெக்சாண்டர், தனது 78வது வயதில் காலமானார்.