1. Home
  2. தமிழ்நாடு

சோகம்..! தி.மு.க கொடியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தி.மு.க., கிளைக் கழக செயலாளர்..!

Q

தமிழகத்தில் தேசிய, மாநில, உள்ளாட்சி அமைப்பு ரோடுகளில் உள்ள தங்கள் கட்சி கொடி கம்பங்களை அகற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தி இருந்தார்.
பொது இடங்களிலும் வைத்துள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விபரங்களை, கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று துரை முருகன் உத்தரவிட்டுள்ளார். இதனால் கட்சி கொடியை அகற்று பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தி.மு.க., கொடி கம்பம் அகற்றும் போது மின்சாரம் தாக்கி ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கேத்து நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் ( 58 ) பெருமாள் (46) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் (50) உட்பட 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like