1. Home
  2. தமிழ்நாடு

சோகம்..! பனாஸ் நதியில் குளிக்க சென்ற 8 பேர் உயிரிழப்பு..!

Q

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிலர் சுற்றுலாவாக டோங்க் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதில் 25 - 30 வயது மதிக்கத்தக்க 11 பேர், அங்குள்ள பனாஸ் நதியில் குளிக்க சென்றனர். ஆனால், அவர்கள் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் எப்படி நதியில் மூழ்கினர் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Trending News

Latest News

You May Like