1. Home
  2. தமிழ்நாடு

சோகம்..! சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு..!

1

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. பிராட்வே பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கச் சென்ற வட மாநில வாலிபர் சந்தன் என்பவர் மின்சாரம் மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரி, விஜயநகர் இரண்டாவது மெயின்ரோடு சந்திப்பில் பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த சக்திவேல் என்பவர் மீது மின்கம்பி பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த இசைவாணன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like