சோகம்..!! விஜய் மாநாட்டிற்கு வந்தவர் மாரடைப்பால் மரணம்..!

தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு விக்ரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற்றது.
மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் சுட்டெறித்து வருவதால் அங்கு குவிந்துள்ள மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளனர். சுமார் 80க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு விரைந்த மருத்துவ குழுவினர் மயங்கி விழுந்தவர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (34) என்பவர் வந்திருந்தார். அவருக்கு வெயில் தாங்காமல் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.