லீவ் எடுத்து ஊருக்கு சென்ற சச்சினின் பாதுகாவலர் தற்கொலை..!
சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரராக (எஸ்ஆர்பிஎஃப்) 39 வயதான ஜவான் பிரகாஷ் கப்டேவும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றுள்ளார் ஜவான் பிரகாஷ் கப்டே.
இந்நிலையில் இன்று ஜவான் பிரகாஷ் கப்டே. தனக்கு வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே, அதிகாலை கழுத்தில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஜவான் பிரகாஷ் கப்டேவுக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.தனிப்பட்ட காரணங்களுக்காக ஜவான் பிரகாஷ் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.