சச்சின் கிரிக்கெட்டுக்கு மட்டும் கடவுள் அல்ல, அவர்...! சகவீரர் உருக்கம்!!

சச்சின் கிரிக்கெட்டுக்கு மட்டும் கடவுள் அல்ல, அவர்...! சகவீரர் உருக்கம்!!

சச்சின் கிரிக்கெட்டுக்கு மட்டும் கடவுள் அல்ல, அவர்...! சகவீரர் உருக்கம்!!
X

சச்சின் டெண்டுல்கரின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இணையத்தில் சிறப்பு நேரலை செய்தார். அப்போது பேசிய அவர், சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த விளையாட்டு உலகத்திற்கே கடவுள் என்றும் அவரின் பிறந்தநாளை விளையாட்டு தினமாக கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்தார். தனது வீட்டின் ஒரு அறை முழுக்க சச்சினின் புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய பேட்டை தனது வீட்டு பூஜையறையில் வைத்திருப்பதாகவும் ஸ்ரீசாந்த் கூறினார்.  

சச்சின் தனது  100வது சதத்தை பூர்த்தி செய்தபோது அவரை கட்டிப்பிடித்தது தன் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம் என்றும், அவர் விளையாடிய காலத்தில் தானும் விளையாடியது மிகப்பெரிய அதிர்ஷ்டம் எனவும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். சச்சின் ஒரு மாமனிதர், கிரிக்கெட்டுக்காகவே பிறந்தவர் அவர் என்று ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

newstm.in

Next Story
Share it