1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலையில் நாளை 20-ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் அனுமதி..!

1

சபரிமலையில் இந்த வருடத்துக்கான மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த 15-ம் தேதி மகர விளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். 

நாளை 20-ம் தேதியுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைகிறது. அன்று இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்று 19-ம் தேதியுடன் நெய்யபிஷேகம் நிறைவடைகிறது. 

மண்டல, மகரவிளக்கு காலத்தின் கடைசி நாள் நெய்யபிஷேகம் என்பதால் இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 21-ம் தேதி காலையில் திருவாபரணம் பந்தளத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். 

அன்று காலை 6.30 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்று பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. நடையை சாத்தி முடித்த பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் மேல்சாந்தி சபரிமலை கோயில் சாவியை ஒப்படைப்பார். 

இதன்பின் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி அந்த சாவியை மேல்சாந்தியிடம் பந்தளம் மன்னர் பிரதிநிதி திருப்பிக் கொடுப்பார். இதன்பின் பந்தளம் மன்னர் பிரதிநிதி 18-ம் படி வழியாக இறங்கி பந்தளத்திற்கு புறப்பட்டு செல்வார். மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 13-ம் தேதி திறக்கப்படும்.

Trending News

Latest News

You May Like