1. Home
  2. தமிழ்நாடு

ரஷ்யாவின் லூனா விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர் பள்ளம் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

1

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷ்யா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. 

புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழைக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. 

இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என நாசா முடிவு செய்துள்ளது. 

1

இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020-ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like