1. Home
  2. தமிழ்நாடு

இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்..!

1

உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்தது. 

தொடக்கம் முதலே இந்த போரில் .நடுநிலைமை வகிப்பதாக சீனா கூறியது. அதன் படி ரஷியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவற்றை சீனா செய்யவில்லை. எனினும் ஐரோப்பிய நாடுகள் விதித்து வந்த பொருளாதார தடைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே போல் உக்ரைனுக்கு எதிராக போர் முயற்சிக்கு பயன்படும் எந்திரங்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் மறைமுகமாக ரஷ்யாவுக்கு சீனா உதவுகின்றது. 

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் அதிபர் புடின் இன்று (வியாழக்கிழமை) சீனாவுக்கு செல்கிறார். 2 நாட்கள் அங்கு தங்கும் அவர் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு அதிபர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Trending News

Latest News

You May Like