1. Home
  2. தமிழ்நாடு

மன்னிப்பு கேட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

1

வானில் பறந்து கொண்டிருந்த கஜகஸ்தான் விமானம் ஒன்று கடந்த புதன் கிழமை புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் மொத்தம் 67 பேர் பயணம் செய்தனா். அந்த விமானம் அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கடுமையான பனிமூட்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது.இதனால் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதும் தெரிந்தது. முன்னதாக தரையிறங்க முயன்றபோது பெரிய தீப்பிழம்பு போல் வெடித்தது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 38 பேர் உயிரிழந்தனா்.

மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினா். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும், விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். விமானத்தில் இருந்த பயணிகள், அஜர்பைஜான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

முதற்கட்ட விசாரணையில் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பறவை மோதியதில் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கஜகஸ்தான் விமான விபத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக ரஷ்யா தரப்பில் கூறுகையில், கஜகஸ்தான் விமானம் விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனா்.
 

அந்த விபத்து நடைபெற்றபோது விமானம் ரஷ்ய எல்லையில் பறந்து கொண்டிருந்தது. தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யா மீது ஏவுகணைகளை வீசி வருகிறது. அதனை தடுக்க ரஷ்யாவின் வான்பகுதி முழுவதும் பாதுகாப்பு எல்லைக்குட்பட்டு இருக்கும்.

எனவே கஜகஸ்தான் விமானம் வானில் பறந்தபோது, வான்வழி தாக்குதல் தடுப்பு திறன் செயல்பாட்டில் இருந்திருக்கலாம். அதன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும் ரஷ்யா தான் விமான விபத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. எனினும் ரஷ்ய அதிபர் தனது அனுதாபங்களையும், மன்னிப்பையும் கேட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like