இனி உரிமம் இன்றி விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை..!
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் – 2014-ன் கீழ் பதிவு செய்து உரிய அனுமதி பெறுவதற்கு இணையதளம் மூலமாக https://tnswp.com (Tamilnadu Single Window Portal) மூலம் உரிய ஆவணங்களுடன் 31.10.2024-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் மகளிர் விடுதிகள் சட்டத்தின்படி ரூ.50ஆயிரம் மட்டும் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.