1. Home
  2. தமிழ்நாடு

பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்த அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு வலை வீச்சு..!

1

நாமக்கல் மாவட்டம் பரளியை அடுத்த கங்காணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னு வேலப்பன். இவர் நாமக்கல் நகரில் சந்தைப் பேட்டை புதூரில் பாலாஜி பைனான்ஸ் என்ற பெயரில், கடந்த 35 ஆண்டுகளாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் நாமக்கல், மோகனூர், பரமத்தி வேலூர், ராசிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பணம் டெபாசிட் செலுத்தி உள்ளனர். அந்த பணத்திற்கு 100 க்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 1.25 வீதம் வட்டி தந்துள்ளார்.

நிதி நிறுவன அதிபரை நம்பி வயதானவர்கள் உள்ளிட்ட பலரும், ரூ.1 லட்சம் முதல் கோடி வரை இந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்து உள்ளனர். ஆரம்பத்தில் பணம் கட்டியவர்களுக்கு உரிய நேரத்தில் முறையாக வட்டித் தொகை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பைனான்ஸ் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு பொன் வேலப்பன் தலைமறைவாகி விட்டார். பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டியவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து மாவட்ட ஆட்சியரிடம்  இது குறித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், பணம் டெபாசிட் செய்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர், நாமக்கல் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில், கடந்த மே மாதம் புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில், பாலாஜி பைனான்ஸ் நிறுவனத்தை நம்பி வயதான முதியோர்கள் உட்பட ஏராளமானோர் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகாமாக பணம் செலுத்தியுள்ள நிலையில் அவர் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பணத்தை மீட்டு உரியவர்களிடம் திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பொன் வேலப்பனை தேடி வந்தனர்.

நேற்று அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவருடைய மனைவி வசந்தி, அவருடைய மகன் சரவணன் மகள் உமா (எ) சசி, வீரக்குமார், பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like