100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி - மின்சார வாரியம் விளக்கம்..!
கடந்த 15 நாட்களாக மின் வாரியத்தில் ஆதார் எண்ணுடன் மற்றும் மின் இணைப்பு எண்களை ஒன்று சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டுமே அரசு வழங்கக்கூடிய இலவச 100 யூனிட் மின்சாரம் கிடைக்கும் என்று முன்னதாக தகவல்கள் பரவி வந்தான.
இதை அடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் சங்கத்தின் மத்திய அமைப்பு இதுகுறித்து விளக்கம் கேட்டு மின்வாரிய மேற்பார்வையாளருக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் மின்சார வாரியம் தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது, அதில் ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும்.அதுவே வீட்டின் உரிமையாளர் அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களுக்கும் 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும். முக்கியமாக அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் இலவச மின்சாரம் றது என்ற தகவல் வதந்தி தான் என்று தெளிவு படுத்தி உள்ளது.
வாடகைக்கு இருப்பவர்களுக்கு மானியம் ரத்து ஆகாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது வீட்டின் உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து செய்யப்படும். வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும். வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறலாம் என்றும், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.