குழந்தை கடத்தல் என வதந்தி.. 70 வயது மூதாட்டியை அடித்து கொலை செய்த கிராம மக்கள் !
பீகார் மாநிலத்தின் நவாடா மற்றும் கவா ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் குழந்தைகள் திருட்டு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் குவிந்துள்ளன.
இந்த நிலையில் மாலை நேரங்களில் குழந்தைகளை திருடும் கும்பல் உலாவுவதாக வதந்தி பரவி வந்துள்ளன. சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தனது சொந்த கிராமமான அங்க்ராவில் இருந்து நாக்வான் பஜார் என்ற இடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு வேலையை முடித்து மாலையில் கிராமத்துக்கு திரும்பிய சாந்தி தேவியை கண்ட நாக்வான் பஜார் கிராம மக்கள் குழந்தை திருட வந்த பெண்மணி எனக்கருதி கிராம மக்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்கியியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த சாந்தி தேவி அருகில் உள்ள சிர்தாலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதில் அந்த கிராம மக்கள் மூதாட்டியை இறக்கம் இன்றி தாக்கும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிராம வாசிகள் சிலரை கைது செய்துள்ளனர்.
newstm.in