தங்கப்புதையல் இருப்பதாக வதந்தி...தங்கம் தேடும் மக்கள்..!

சமீபத்தில் பாலிவுட் திரைப்படமான 'சாவா' திரைக்கு வந்தது. விக்கி கவுஷால், ராஷ்மிகா மந்தனா, அக்சய் கன்னா நடித்த படத்தில், முகலாயர் காலத்து தங்கப்புதையல் இருப்பதாக கூறி, ம.பி., மாநிலம் ஆசிர்கர் கோட்டையை காட்டியிருந்தனர்.
இந்த படத்தில் கூறியிருப்பதை உண்மை என்று நம்பிய கிராமத்தினர்,
மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆசிர்கர் கோட்டை அருகே வயல்களில் தோண்ட ஆரம்பித்தனர். நுாற்றுக்கணக்கான பேர், இரவு பகலாக கிராமத்தில் இருக்கும் பொதுஇடம், வயல்வெளிகளை எல்லாம் தோண்ட ஆரம்பித்தனர்.
டார்ச் விளக்கு, கடப்பாரை, மண்வெட்டியுடன் கிராம மக்கள், மண் தோண்டுவதும், சலிப்பதுமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளன. தோண்டிய சிலர் தங்க நாணயங்களை எடுத்து விட்டதாகவும், ஊருக்குள் வதந்திகள் பரவியுள்ளன.
புர்ஹான்பூர் எஸ்.பி., தேவேந்திர பட்டிதார் கூறியதாவது:
நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அந்த பகுதியில் தங்கம் இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. புவியியலாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த இடத்தை பரிசோதித்து, மண்ணில் தங்கத்தின் எந்த அடையாளமும் இல்லை என உறுதிப்படுத்தினர்.
கிராமவாசிகளை அடிப்படையற்ற வதந்திகளுக்கு பலியாகாதீர்கள் என்றும், இத்தகைய கட்டுப்பாடற்ற தோண்டுதல் ஆபத்தானது மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Inspired by 'Chhava' Movie, Hundreds Dig for Treasure in #MadhyaPradesh
— BNN Channel (@Bavazir_network) March 8, 2025
A bizarre incident unfolded in #Burhanpur, Madhya Pradesh, after rumors spread about hidden treasure shown in #VickyKaushal's film '#Chhava'. Believing the treasure to be real, hundreds of people gathered… pic.twitter.com/fcuBTWdvy6