1. Home
  2. தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விடுத்த எச்சரிக்கை !

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விடுத்த எச்சரிக்கை !


இந்தியாவுக்கு உரிமையுள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா, இந்தியாவின் பதிலடி தாங்கமுடியாமல் சீற்றமும், பதற்றமும் கொண்டுள்ளது. இதனால், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதில், முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தசரா விழா கொண்டாடப்பட்டது. சமூக இடைவெளியுடன் விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், குடியுரிமை திருத்த சட்டம் எந்த ஒரு மதத்தினருக்கும் எதிரானது அல்ல. ஆனால், இதற்கு எதிராக நாட்டில் சில போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை சிலர் மீண்டும் தூண்ட முயற்சி நடைபெறுகிறது. இது தவறான செயல் என பேசினார்.

மேலும், இந்தியாவுக்கு உரிமையுள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா, அமெரிக்கா, ஜப்பான் என பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. ஆனால், இந்தியாவின் தக்க பதிலடி சீனாவை சீற்றமும், பதற்றமும் அடையச்செய்துள்ளது. எனவே, சீனாவை எதிர்கொள்ளும் வகையில், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

Trending News

Latest News

You May Like