1. Home
  2. தமிழ்நாடு

மறுபடியுமா ?வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.820 கோடி..!

1

அண்மையில் சென்னையில் மெர்க்கண்டைல் வங்கியின் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதாக வைக்கப்பட்டது சர்ச்சையானது. அதில் 30000 ரூபாய் தவிர மற்ற பணத்தை வங்கி மீட்டது.அதேபோல் தஞ்சாவூரில் ஒருவருக்கு பல கோடி ரூபாய் பணம் வந்ததாக எஸ்எம்எஸ் மட்டும் வந்தது. ஆனால் பணம் வரவில்லை. இதேபோல் தவறுதலாக சில வங்கிகள் பணத்தை வேறு ஒருவருக்கு வரவு வைத்து சிக்கலில் சிக்கின.

இந்நிலையில் யூகோ வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.820 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த பணம், தவறாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது என வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பணத்தை திருப்பி எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பணத்தை மீட்கும் முயற்சியில் யூகோ வங்கி ஈடுபட்டது. இதுவரை ரூ.649 கோடியை அந்த வங்கி மீடடுள்ளது. இது, மொத்த பணத்தில் 79 சதவீதம் ஆகும். மீதி ரூ.171 கோடியை மீட்கும் முயற்சி நடந்து வருவதாக யூகோ வங்கி கூறியுள்ளது. கடந்த நவம்பர் 10 முதல் 13 வரையிலான காலகட்டத்தில், ஐஎம்பிஎஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களால் தொடங்கப்பட்ட சில பரிவர்த்தனைகள், யூகோ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணமாக வந்து சேர்ந்துள்ளது

இது மனித தவறால் நடந்ததா அல்லது இணைய குற்றவாளிகளின் நடவடிக்கையா என்பது பற்றி வங்கி எதுவும் தெரிவிக்கவில்லை.

Trending News

Latest News

You May Like