ரூ.650 கோடி! 43 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், காலணி! அசத்தும் முதல்வர்!

ஒரு மாநில முதல்வர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எல்லோரும் அக்கட தேசத்தைத் தான் அடையாளம் காட்டுகிறார்கள். வாராவாரம் கொண்டாட்டம் தான் என்கிற ரீதியில் மக்களுக்கான திட்டங்களை வகுத்து, சரியாய் செயல்படுத்தியும் வருகிறார்.
லேட்டஸ்டாக, அரசு பள்ளி மாணவர்கள் 43 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
அரசு பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை, வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள், விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு என ஜெகன் மோகன் ரெட்டியின் ஒவ்வொரு திட்டமும் அதிரடி ரகம் தான். இவை வெறும் தேர்தல் வாக்குறுதிகளாக மட்டுமே காற்றோடு கலந்து விடாமல், செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டுவதில் தான் ஜெகனின் வெற்றி மாநில எல்லைகளைக் கடந்தும் நடைபோடுகிறது.
பத்தாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் 3 செட் சீருடைகள், புத்தகங்கள், பை, காலணிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து, இதற்காக ரூ. 650 கோடி நிதியையும் ஒதுக்கியிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.