1. Home
  2. தமிழ்நாடு

வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணம் பறிமுதல்..!

1

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாணே மாவட்டத்தில் உள்ள கல்யாண் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு குழுவினர் சனிக்கிழமை காலை அந்த வழியாக சென்ற வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.55 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுமதிக்கப்பட்ட தொகை ரூ. 10 லட்சத்துக்கு மேல் இது இருந்ததால், இந்த விவகாரம் மேலும் விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டது என்று தேர்தல் அதிகாரி விஸ்வாஸ் குஜார் தெரிவித்தார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like