விடாமுயற்சி முதல் ஷோவுக்கு தலைக்கு ரூ.500 கட்டணம்..?

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 'விடாமுயற்சி' நாளை ரீலீஸ் ஆகிறது. மதுரை உட்பட தென்மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் 'புக்' செய்யப்பட்டுள்ளது. முதல் ஷோவுக்கு எப்போதுமே 'டிமாண்ட்' இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தி தலைக்கு ரூ.500 நிர்ணயிக்க தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 'மால்கள்', அரசியல் செல்வாக்கு உடையவர்களின் தியேட்டர்களில் வழக்கம்போல் ரூ.190 வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களில் ரசிகர்கள் வருவது குறையும் என்கின்றனர் உரிமையாளர்கள்.