துபாயில் ரூ.500 கோடி பதுக்கல் - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்..!
தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சத்து பேருக்கும் மேல் முதலீட்டை பெற்று விவகாரத்தில் 2438 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் ஆருத்ரா நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 6.5 கோடி பணம்,6 கிலோ தங்கம், ரூ.102 கோடி வங்கி கணக்க , 22 கார்கள், 96 கோடி வங்கி கணக்கு வைப்பில் இருந்த பணம் முடக்கம் செய்து 103 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாய் நாட்டில் இயக்குனர்கள் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கி உள்ள இயக்குனர்களை பிடிக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், இதுவரை மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துகளை கண்டறிந்து, 60 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். சொத்துகளை முடக்க துபாய் அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.