1. Home
  2. தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி..!

1

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் சக்திவேல், த.பெ.விநாயகம், வயது 47 என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

சக்திவேல் அவர்களின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like