நடிகர் விஷாலிடம் இருந்து ரூ.45 லட்சம் சுருட்டிய பெண்! யார் தெரியுமா?

நடிகர் விஷாலிடம் இருந்து ரூ.45 லட்சம் சுருட்டிய பெண்! யார் தெரியுமா?

நடிகர் விஷாலிடம் இருந்து ரூ.45 லட்சம் சுருட்டிய பெண்! யார் தெரியுமா?
X

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் என இயங்கி வந்த விஷாலுக்கு கொரோனா காலம் சற்று இடைவெளி தந்திருக்கிறது. ஆனாலும் இதற்கு நடுவில் சக்ரா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். அது பெரும் வரவேற்பையும் பெற்றது. 

இரும்புத்திரை, துப்பறிவாளன் படங்களை போல சக்ரா தனக்கு நற்பெயரை பெற்றுத்தரும் என விஷால் நம்பிக்கையில் உள்ளார். சக்ரா படம் ஆன்லைனில் மோசடி செய்து பணம் பறிக்கும் கூட்டத்தை பிடிக்கும் கதை என தெரிகிறது. இந்நிலையில் நிஜ வாழ்க்கையில் விஷால் ஒரு பெண்ணிடம் 45 லட்ச ரூபாய் பணம் ஏமாந்துள்ளார் என செய்தி வெளியாகி இருக்கிறது. 


விஷாலின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கடந்த ஆறு வருடங்களாக அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சுருட்டி தற்போது 45 லட்சம் மோசடி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரிடம் அடித்த பணத்தில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட்டாராம். இதைக்கூட கண்டுபிடிக்காத விஷால் வீடியோ பைரசியை கண்டுபிடிக்க போகிறேன் என பேசி வருகிறார்.

newstm.in

Next Story
Share it