1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்.. முகமது ஷமிக்கு உத்தரவு..!

Q

முகம்மது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். திருமணம் முடிந்த நான்கு ஆண்டுகளுக்குள் இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முகம்மது ஷமி தன்னை துன்புறுத்துவதாக 2018-ல் ஜஹான் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இருவரும் விவாரத்து பெற்றுக்கொண்டனர். விவாகரத்து பெற்ற நிலையில், ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்தார். 

விவாகரத்து வழக்கில் மனைவி ஹசின் ஜஹான் மாதம் ரூ 10 லட்சம் ஜீவனாம்சம் கோரிய நிலையில், ரூ.1.3 லட்சம் வழங்க அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து ஹசின் மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like