1. Home
  2. தமிழ்நாடு

3 கோடியே 99 லட்சம் ரூபாய் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்டது. நெல்லை பாஜக வேட்பாளர் பணமா?

Q

தமிழ்நாடு, புதுவை என 40 மக்களவை தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பரப்புரைகள் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பல்வேறு பகுதியில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் பதிவாகின்றன.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், யாரும் 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை சல்லடை போட்டு சோதனை செய்தாலும், சில அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் கோடி கணக்கான பணம் வாகனங்கள் மூலமாகவோ ரயில் மூலமாகவோ எடுத்துச் செல்லப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு படு ஜோராக பணம் விநியோகம் செய்யப்படலாம் என்பதை அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு ரயிலில் மூன்று பேர் தேர்தல் செலவுக்காக பணம் எடுத்துச் செல்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையம் வந்த போது ரயில்வே போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் ரயிலில் பயணித்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 5 பைகளில் சோதனை செய்த போது, ரூபாய் 3 கோடியே 99 லட்சம் ரூபாய் இருந்தது. யாருடைய பணம்? எதற்காக ரயிலில் பணம் எடுத்துச் செல்லப்படுகிறது? என அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் மூவரையும் விசாரணைக்காக தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து மூன்று பேரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்ததில், 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மூவரும் பாஜக பிரமுகர்கள். பாஜக அடையாள அட்டைகளும் வைத்திருக்கிறார்கள். மூவரும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளு மவுண்ட் ஹோட்டல் பணியாளர்கள் என்பதால், நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக ரொக்கப் பணம் எடுத்துச் செல்லப்படுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ப்ளு மவுண்ட் ஹோட்டலில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட பணத்திற்கு உரிய கணக்கு உள்ளதா? அல்ல கருப்பு பணமா? என தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்

Trending News

Latest News

You May Like