1. Home
  2. தமிழ்நாடு

30 வயதிற்குள் அனைவருக்கும் மாதம் ரூ.3,000  உதவித்தொகை! முதல்வர் அதிரடி உத்தரவு!

30 வயதிற்குள் அனைவருக்கும் மாதம் ரூ.3,000  உதவித்தொகை! முதல்வர் அதிரடி உத்தரவு!


தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் சட்டக் கல்லூரிகளில் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அதன் பின்னர் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இவர்கள் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழைப் பெற முடியும். அது தவிர, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் குறைந்தது 2,3 வருடங்களாவது இளநிலை வழக்கறிஞர்களாக பயிற்சி பெற வேண்டும்.

இந்நிலையில், இளம் வழக்கறிஞர்கள் தங்களது பணியைத் தொடங்குவதற்கு குறைந்தது நான்கு வருடங்களாவது ஆகின்றது. வறுமை நிலையிலுள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் வழக்கறிஞராகி பொருளீட்டுவது இந்நிலையில் சிரமமானது. அவர்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இரண்டு வருட காலத்திற்கு 30 வயதுக்குள் இருக்கும் இளம் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

Trending News

Latest News

You May Like