1. Home
  2. தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்..!

1

தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிபட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (15-12-2023) காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பனையடிப்பட்டி கிராமம், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் (36) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Trending News

Latest News

You May Like