இந்த கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.2500/- கேஷ்பேக்..!

ரூபே பயனர்களுக்கான ஒரு சலுகையாக அறிவிக்கப்பட்ட இந்த ஆஃபர் ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.2,500 வரை கேஷ்பேக் தொகை கிடைக்கும்.அதன்படி, கனடா, ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், யுகே மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் ரூபே கார்டுகளின் கீழ் டெபிட், கிரெடிட், இன்டர்நேஷனல், ப்ரீபெய்ட் மற்றும் காண்டாக்ட்லெஸ் கார்டுகளை பயன்படுத்தினால் கேஷ்பேக் இலவசமாக கிடைக்கும்.
ஆனால், இந்த கேஷ்பேக் சலுகைக்கு நிபந்தனையும் உள்ளது. டிஸ்கவர் நெட்வொர்க் அல்லது டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் கார்டுகளை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களிடம் மட்டுமே கேஷ்பேக் கிடைக்கும். ஆஃபர் காலத்தில் ஒரு கார்டுக்கு ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்ச கேஷ்பேக் தொகை ரூ.2,500 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் மே 26 அன்று சென்னையில் நடைபெறும் 2024 இறுதிப் போட்டிக்கான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மே 20 அன்று பிரத்யேக அனுமதியைப் பெறுவார்கள்.