ஒரு ஃபோன்கால்… பெண்ணின் ரூ.2.2 லட்சம் அபேஸ்! இதுதான் ‘சிம் ஸ்வாப்’ மோசடி!

சிம் ஸ்வாப் மோசடி மூலம் பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.2 லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசியவர்கள், அப்பெண்ணிடம் 3ஜி சிம் கார்டையே நீங்கள் இன்னும் பயன்படுத்துகிறீர்கள் என்றும் உடனடியாக 4ஜி சிம் கார்டாக மாற்றாவிட்டால் சிம் பிளாக் செய்யப்படும் என தெரிவித்தனர்.
அதனை நம்பிய அப்பெண், அவர்களிடம் தனது தொலைபேசி எண் குறித்த முழு விவரங்களை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் 20 இலக்கக் குறியீட்டை அவரது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பியதாகவும், அதைக் கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்பின்னர் பெண்ணின் சிம் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மோசடிக் காரர்கள் தாங்கள் வைத்திருக்கும் குளோன் சிம்கார்டில் அந்த பெண்ணின் எண்ணை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளனர். அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2.2 லட்சத்தை திருடிவிட்டனர்.
இதனையடுத்து அந்தப்பெண் புனேவின் அலங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்ட கூட்டத்தை தேடி வருகின்றனர். இந்த மோசடிக்கு பின்னால் சிம் ஸ்வாப் முறை தான் இருக்கும் என்கின்றனர். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் வலியுறுத்துகின்றனர்.
newstm.in