இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.20,000.. அரசாணை வெளியிட்டது அரசு..!

பதிவுத்துறை சார்ந்து பணியாற்றிவரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயன்படும் விதமாக ஆவண எழுத்தர் நிதியத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பதிவுத் துறையில் பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும், இயற்கையாக மரணம் அடைந்தால் ரூபாய் 20 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு என தனி நல நிதியம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக நல நிதி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
5600 ஆவண எழுத்தர்களிடம் இருந்து மாதச் சந்தாவாக ரூ.1,000 வீதம் 56 லட்சம் ரூபாய் திரட்டி பற்றாக்குறை தொகை 9.88 அரசு மானியத்துடன் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான உத்தரவு உடனே நடைமுறைக்கு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.