ஒருவருக்கு ரூ.2000; வாரி வழங்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கு மதிய உணவு மட்டும்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலை உணவு பொறுத்தவரையிலே ஒரு சிறிய ஜூஸ் வாட்டர் பாட்டில் ஒன்றும் ஒரு ஐந்து பிஸ்கட்டுகள் கொண்ட ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை. காலையில இட்லி உப்புமா போன்ற எந்த ஒரு காலை உணவும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் மட்டுமில்லாமல் பல வயதானவர்களும் கூட வந்திருக்கிற நிலையில், காலை உணவு ஏற்பாடு செய்யப்படாமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காலை உணவு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்பதால், அதிகாலை முதலே காத்திருந்ததாகவும், ஆனால் ஒரு பிஸ்கட் பாக்கெட் மற்றும் ஒரு சிறிய பாட்டிலில் ஜூஸ் மட்டுமே கொடுத்ததாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் சிலர் வெளியே போய் சாப்பிட்டு வரலாம் என்றால், பக்கத்துல வந்து உணவுக்கான எந்த ஒரு ஏற்பாடுமே கிடையாது. மதிய உணவு மட்டும்தான் தற்போது சுட சுட தயாராகி வருகிறது. அருகில் கடைகளோ அல்லது காசு கொடுத்து வாங்குவதற்கான வாய்ப்புகளோ கூட இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
தவெக நிகழ்ச்சி நடைபெறும் நட்சத்திர விடுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியில் சென்றால் மட்டும்தான் உணவு கடைகள் இருக்கிறது. ஒரு கிலோமீட்டர் தூரம் வெளியில் சென்று சென்றுவிட்டால் மீண்டும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தால், தொண்டர்கள் பசியுடனே 3 மணி நேரமாக அமர்ந்திருக்கிறார்கள்.
அதே வேலையில் மதிய உணவில் கேரட் அல்வா, மசால் வடை, காலிஃபிளவர் 65, பூரி, உருளைக்கிழங்கு பட்டாணி குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கதம்ப சாம்பார், அப்பளம், ரசம், மோர், சாலட், வாழைப்பழம், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஊறுகாய், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட 20 வகை உணவுகள் வழங்கப்படுகிறது. உணவுக்காக ஒருவருக்கு ரூ.2000 வரை செலவு செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது