குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

தலைநகர் டெல்லியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 200 குழுக்களை அமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, இக்குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை செய்ய உள்ளனர். அப்போது, குழாய் மூலம் குடிநீரில் கார் கழுவுவது, தண்ணீர் தொட்டி நிரம்பி வடிய செய்தல், வீட்டு உபயோக குடிநீரை வணிக காரணங்களுக்காக பயன்படுத்துவது, வீட்டு கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது ஆகியனவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.